சுத்தமான பாரதம்
சுத்தமாகனும் நம்ம பாரதம்
சுத்தமாகனும் நம்ம பாரதம்
எத்திசையும் புகழ்மணக்க
சுத்தமாகனும் நம்ம பாரதம்
அர்த்தமாகனும் சுத்தம்தான்
சுகம்தரும்முனு அர்த்தமாகனும்
முன்னவங்க உயிர் சிந்தின நாட்டுல
இன்னவங்க சேத்துவச்ச குப்ப கிடக்குது
முன்னவச்ச கால பின்ன வைக்காத நாட்டுல
இன்னவங்க கால முன்ன வைச்சு வாங்க சுத்தமாக்கலாம்
நம்ம நாட்ட சுத்தமாக்கலாம்!
சொன்னவங்க யாருன்னு முக்கியமில்ல
சொன்னசொல்லு எதுக்குன்னு எண்ணிப்பாக்கலாம்
பின்னவரும் சந்ததியெல்லாம் பழகிக்கொள்ளுமே
என்ன என்ன ஆனந்தம் வந்ததுன்னு அள்ளிக்கொள்ளுமே
ஆனந்தம் அள்ளிக்கொள்ளுமே!

