முற்றுப்புள்ளி

பத்தே நொடியில் பணக்காரனையும்
அழ வைக்கும் !
எட்டே நொடியில் ஏழையையும்
அழ வைக்கும் !
பருவமே அறியாத பச்சிளங் குழந்தையானாலும் சரி!
பாடாய் படுத்திவிடும் இது வந்து விட்டால்?
இல்லை என்றால் நகராது!
நடை முறை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்!
சில மனித உயிர்களின் மறக்க முடியாத
"சிவப்பு" பக்கங்கள்!
ஒட்டு மொத்த உலக
வாழ்கையின் எதிர்பார்ப்பு, அத்தியாயம், சிந்தனை , நோக்கத்தின் முற்றுப்புள்ளி !
"பசி"