மழை
குடைக்குள் மழையா?
ஆம்
அன்று மேகத்தின் கண்ணீரை காணமுடியாமல்
நாங்கள் ஒற்றை குடைக்குள் தஞ்சமடைய
அவனது காதல் மேகம் என்மீது மழையாய்பொழிய
எங்கள் உதடுகள் ஒன்றோடு ஒன்று உரசி இடிஇடிக்க
மண்ணோடு கலந்த நீராய் அவன் என்னோடு கலந்திட நினைத்தபொழுது
குடைக்குள் மழைதானே பெய்தது