குட்டிக் கதை

வெடித்துச் சிதறியது
குழந்தையின் பலூன்..

குதூகலத்தில் காற்று-
கிடைத்ததாம் சுதந்திரம்..

அழுகையில், ஆத்திரத்தில்
ஆர்ப்பாட்டத்தில் குழந்தை..

அம்மா வந்தாள்-
அமைதியானது குழந்தை,
சிறைப்பட்டது காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Nov-14, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே