லக்‌ஷனாவும் அமானுஷ்யமும் -1

” மெளனம் நிறைந்த அத்தனை பெரிய சாலையில் , ஒரு சிறு எறும்பைக்கூட காணமுடியாத அளவிற்கு ஊரையே விழுங்கி தன் பசி ஆறிக்கொண்டிருந்தது கும்மென்ற இருட்டு………. “


” உண்ட மயக்கத்திற்க்கு மேலும் மயக்கம் கொடுக்கும் வகையில் ஆத்ம இன்பத்தை வாரி வழங்கும் வண்ணமாய் , சரியான பக்கதாளங்களுடன் (இடி , மின்னலுடன்) ஜோ வென்று பெய்யும் மழைத்துளிகள் , யாரும் இல்லா சாலையில் அழகிய நர்த்தனங்களுடன் அபிநயம் பிடித்து ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது……. “


” எத்தனை பெரிய சுயநலவாதி அந்த இருட்டு?!”


” சுயநலத்துடன் செய்யும் எந்த ஒரு செயலும் நிலைக்காது என்பதை உணர்த்துவதுப்போல் அவை நிலைக்கவில்லை ….. ஆம் அப்பொழுது வெகு தூரத்தில் அந்த அழகிய மழையின் இசைக்கு போட்டியாக ஒரு சத்தம் எழும்ப, அத்திசை நோக்கி அப்படியே மழைத்தூறல்கள் அப்படியே ஸ்தம்பித்து நர்த்தனங்களை நிறுத்தி மெல்ல பதுங்கி நின்று நடப்பதை வேடிக்கைப்பார்க்க ஆயத்தமானது……. “


“ ஆம் மெல்ல கதவு ஒன்று திறந்தது , இல்லை !! இல்லை !! பச்சிளம் குழந்தைப்போல் சிணுங்கியது……. மெதுவாக நத்தையின் நடையில் ஒரு தத்தை போன்ற ஒரு இளங்கன்று மான் போல் துள்ளி துள்ளி , திருட்டு தனமாய் ஒரு செந்நிற குருதியின் வண்ணமான குடையுடன் கை நிறைய காகித கப்பலுடனும் தன் வீட்டை விட்டு வெளியேறி , சற்று தொலைவில் தேங்கி இருக்கும் நீரில் கப்பல் விட்டு கைதட்டி ஆனந்தத்தில் மிதந்துக்கொண்டிருந்தது....இளங்கன்று பயம் அறியாதது என சும்மாவா சொன்னாங்க நம் முன்னோர்கள்…..பாவம் அதுவே தன் கடைசி ஆனந்தம் என்பதை அறியாது அக்குழந்தை….… "


” அப்பொழுது தூரத்தில் ஒரு நாய் , ஊஊஊஊஊஊ - என்று ஊளையிட்டது……”


” சட்டென்று அவள் மூளையில் அச்சத்தம் மின்சாரமாய் பாய , தன் பாட்டி சொன்ன பல பழங்கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்து துறு துறுவென்ற அந்தக்குட்டிக்கண்கள் கோழி முட்டையாய் பயத்தில் விரிந்தது….. “


“ அச்சச்சோ நாய் வேற ஊளையிடுது…. நாம வேற அம்மாக்கு தெரியாம வந்துட்டோமே…. ஏன் நாய் இப்படி ஊளையிடுது ???? ஒரு வேள ...........பாட்டி சொன்னமாறி எதும் பூதம் கீதம் வருதோ…. !!!!! “ என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டாள் லக்‌ஷனா குட்டி


லக்‌ஷனா குட்டி ” நிரஞ்சன் , நிரல்யாவிற்க்கு ” ஒரே செல்லமகள்….. என்னதான் செல்லமகள் ஆனாலும் லக்‌ஷனா-வ கவனிச்சுக்குறது எல்லாம் அவள் பாட்டி தான்…. காரணம் நிரஞ்சனும் நிரல்யாவும் இயந்திரவாழ்க்கையில் லக்‌ஷனாவின் வருங்காலத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்கின்றேன் என்ற பெயரில் தொலைத்துக்கொண்டிருந்தனர்… லக்ஷனாக்கு அவள் பாட்டி-னா உயிர்…எதையும் பாட்டிகிட்ட மறைக்கமாட்டா…. தினமும் பாட்டிக்கிட்ட கதை கேட்கலனா அவளுக்கு தூக்கமே வராது……. இப்படி கதக்கேட்டு கேட்டு தூங்கி பழகின நம்ம லக்ஷனா குட்டிக்கு பாட்டி ஒரு வாரம் ஊருக்கு போனதால தூக்கம் வராம ஜன்னல் வழியா மழைய வேடிக்க பாத்துகிட்டு இருந்தா……. அப்ப தான் மழை தண்ணீர்-ல கப்பல் விடலாம்-னு லக்ஷனா யாருக்கும் தெரியாம வெளிய வந்தா….


“ பயத்தில் வேக வேகமாய் அவள் கால்கள் மழைநீரில் சதக் சதக் என நீரில் ஒலி எழுப்பிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது…..மழை நீர் அவள் பிஞ்சு பாதத்தை அனைத்து நழுவி நழுவி மீண்டும் அவள் நடைக்கு அணைப்போடுவதாய் துடித்துக்கொண்டு இருந்தது…….. “


“ இப்படி அந்த மழைநீர் அவளின் கால்களை அணைப்போட துடிப்பதிலும் சிலக்காரணம் உண்டு…..சில நேரங்களில் இயற்கை நமக்கு உணர்த்துவது புரியாவிட்டாலும் , அதில் சில உண்மைகள் இருப்பது என்னவோ உண்மைதான்!!!!!…..பெரியவர்கள் நமக்கே புரிவதில்லை , இந்த பிஞ்சு குழந்தை மட்டும் உணரவா முடியும் ??? வரப்போகும் ஆபத்தை….. !!! “


“ திடீர் என்று அந்த இருட்டை விழுங்கும் அளவிற்க்கு ஒரு வெளிச்சம் அவள் பின்புறம் தோன்றியது!!!!!!….. அந்த வெளிச்சம் நீர் அலைகள் போல் அங்கும் இங்கும் பரவிக்கொண்டு குருதியின் வண்ணத்தில் மின்னலாய் வெட்டிக்கொண்டிருந்தது…..”


“ அதை கவனித்த லக்‌ஷனா பயத்துடன் பின்புறம் திரும்பினாள்… பயத்தில் அவள் கண்கள் ஸதம்பித்து தலை முடிகள் மழையில் முளைத்த காளான் போல் புது அவதாரம் எடுத்தன….அவள் பயத்தில் பனிக்கட்டியாய் உறைந்தே போனாள்…. அவள் வாய் அம்மா !!!!!!!!!!! என்று கத்துவதற்க்கு முன் அவ்வொளி அவளை ஆக்கிரமித்து தன் வசப்படுத்திக்கொண்டது “


” மகுடியின் அசைவிற்க்கு மயங்கும் பாம்பைப்போல் , லக்‌ஷனா அவள் காதில் ஒலிக்கும் ஒரு குரலுக்கு கட்டுப்பட்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள்….. ”


“ இந்த இரவில் நடந்தேறிய அத்தனை மிரட்சியான சம்பவத்தின் சிறு அடையாளத்தை கூட மிச்சம் இல்லாமல், இருள் தன்னில் சுருட்டி வாரிக்கொண்டு விட்டால் போதும் என ஓடி மறைந்தது….மறுநாள் காலை கதிரவன் கூட எட்டிப்பார்க்க அச்சம் கொண்டான் ”


” நிரல்யா சாப்பாடு ரெடியா ??? “ என நிரஞ்சன் கேட்க


“ இதோ ரெடி !! ஒரு இரண்டு நிமிஷம் பொறு நிரஞ்சன்…. “ என்று சொல்லிக்கொண்டே சாப்பாட்டை நிரல்யா டைனிங் டேபிளை நோக்கி கொண்டு வருகிறாள்

” அம்மா ஊருக்கு போனதும் போனாங்க, எவ்வளவு வேல…செப்பா முடியல நிரஞ்சன் ”


“ அதான் வேலைக்காரி வருவாள எதுக்கு இழுத்துப்போட்டு எல்லாத்தையும் செய்யுற நிரல்யா ??? “


“ஆமா எங்க !! அவ பாதி நாள் வரா , பாதி நாள் வரமாட்டிக்குறா!!…அதான் அவள எதிர் பாக்காம நானே செஞ்சுக்குறேன் ….நேத்து அவ லீவு இன்னைக்கு தான் மகராசி வருவா…. ஆனா மணி ஆச்சு இன்னும் ஆளக்காணோம் …..“ என நிரல்யா புலம்பிக்கொண்டே இருக்கும் வேளையில்………………


அம்மா !! என்று ஒரு பெண் குரல் அவளை அழைத்தது……..


எண்ணெய் போட்டு வாரிய அழகிய கொண்டை தலையுடன் , ஆங்காங்கே ரவிக்கை மற்றும் புடவையின் கிழிசலை மறைக்கும் வண்ணமாய் பல வண்ண சதுரங்க துண்டுகள் அவள் ஆடையை புது விதமாய் அலங்கரித்து அவளை நிரந்தர அடையாளத்தைக் காட்டிக்கொண்டிருந்தது …..


( எனக்கு ஒரு சந்தேகம் , இதைப்பார்த்து தான் நவீன நாகரிகம் என்று ஆங்காங்கே ஜீன்ஸ் துணியை கிழித்துக்கொண்டு திரிகிறார்களோ ??? ஒன்றும் இல்லாதவன் கிடைக்கும் பழந்துணியை ஒட்டுப்போட்டு மானத்துடன் வாழ்கிறான்….எல்லாம் இருப்பவன் இருக்கும் நல்ல துணியைக்கூட கிழித்துக்கொண்டு நவீன நாகரிகம் என்கிறான்…. என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் ??? சரி வாங்க மீண்டும் கதைக்குள் செல்வோம்…)


” அப்பாடா வந்துட்டீயா மாரி…. இப்பதான் உன்னப்பத்தி பேசிட்டு இருந்தோம்… நீயே வந்துட்ட “ என்று நிரல்யா ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்…


” மன்னிச்சுடுங்க அம்மா திடீர்-னு என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போச்சு….அதான் இரண்டு நாளா வேலைக்கு வரல “ என மாரி கூறினாள்


“ சரி சரி பரவால….. இப்ப எப்படி இருக்கா உன் பொண்ணு ??? எதாவது பணம் வேனும்னா தயங்காம என்கிட்ட கேளு “ என நிரல்யா சொல்ல


“ இல்லமா இது வேற…. டாக்டர் கிட்ட போனாலா சரிவராது… எங்க ஊர் சாமியார் கிட்ட காமிச்சு இப்ப சரி ஆகிடுச்சு “


“ டெக்னாஜி வளந்துட்டு வரக்காலத்துல இன்னும் இப்படியே இருக்கீயே மாரி…. சாமி ஆசாமி –னு ….. உடம்பு முடியலனா டாக்டர்-ட போ …. சரி லக்‌ஷனா இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா..... பாத்துக்கோ… நாங்க ஆபிஸ் கிளம்புறோம் “ என நிரல்யா நிரஞ்சனுடன் வீட்டை விட்டு விடைப்பெற்றாள்….. “


” அவர்கள் விடைப்பெற்ற மறுகணமே லக்‌ஷனா ரூம்மில் ஏதோ “ டொம் “ என்று சத்தம் கேட்க வேகமாய் ஓடிச்சென்று மாரி கதவை திறந்தாள் “


அப்பொழுது………………………………….

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (2-Nov-14, 8:14 pm)
பார்வை : 1022

மேலே