என் காதல்
அடிவானம் சிவக்கும் நேரம்
பசும்புல் தரையில்
போர்வை போர்த்தியது போல
அதிமதுர பூக்களின் மேலே
நான் அமர !!
தேனிக்களும் வண்டுகளும்
நேச ரீங்கரத்துடன்
பூக்களில் வட்டமிடுகையில்
உன்னை எண்ணிப் பார்த்தேன் !
தென்றலோடு உன் வாசம்
காற்றோடு வீசுகையில்
உன் பாதகொலுசுகளின் ஓசை
மௌனம் மட்டுமே நான்
உன்னிடம் பேசிய மொழி !
அன்பு கொண்ட உன்னிடம்
நான் கேட்பது ஒன்றே - அன்பே
இப்படி உன் கல்லறைமேல்
என்னை ஏங்க வைத்துவிட்டாயே?
BY
R.Helen Vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xavier Engineering college,
Vannarpettai,
Tirunelveli- 627003