மாசில்லா உலகு

அடேய் மூடா! மன்னிக்கவும் அடேய் மனிதா!!

செயற்கை எனும் அரக்கனை நம்பி
இயற்கை எனும் இறைவனை இழக்கிறாயே!!
இயற்கையை வென்று வாழ்வதாய்
எண்ணிக் கொன்று வாழ்கிறாயே!!
இது நியாயம்தானா?

உன் எண்ணங்களை போலவே
நீ சுவாசிக்கும் காற்றும் அசுத்தமாய்!
ஈரமில்லா உன் இதயம் போலவே
குளங்களும், ஆறுகளும் வறட்சியாய்!
நீ பிறருக்காக அழ மறுத்ததால்,
வானமும் உனக்காக அழ மறுக்கிறது!

புதுமைகள் பல கண்டு என்ன பெருமை?
பழமையில் கண்ட பல மைல்
பதுமையும் பசுமையும் இல்லாத போது!!
விவசாய நிலங்களை எல்லாம்
விலை நிலங்களாக்கி விற்றுத்தீர்த்தால்,
வெறும் பணத்தைக் கொண்டா பசி தீர்ப்பாய்?

வாழ்க்கை தரத்தை மெல்ல மெல்ல உயர்த்தி,
வான் வரை சென்று,
ஓசோனில் ஓட்டை போட்டவர்கள் நாம்!!
நுலொன்றும் போதவில்லை
ஓசோனின் கிழிசலை தைக்க!!

நமது தலைகளுக்கும் மேல்
நமது அரியாசனம் அடுக்குமாடி வீடுகளாய்!
இயற்கையின் அழுகுரலாய்
தொழிற்ச்சாலை சத்தங்கள்!!

நாம் செய்த வினைக்கு
எதிர்வினையாக பூகம்பமும் சுனாமியும்
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு
இயற்கை மட்டும் என்ன விதிவிலக்கா?

அன்று - குருநாதர் இல்லாத குயில்பாட்டு அதிசயம்
இன்று - குயிலும் அதிசயம் குயில்பாட்டும் அதிசயம்


இறுதியாக,

அடேய் மனிதா, மன்னிக்கவும் அடேய் மூடா,

கன்னிப்பெண்ணுக்கு அழகு மாநிறம்
கணிணியுகமானாலும் பூமிக்கு அழகு பச்சை நிறம்!!
பொங்கலுக்கு வீடுகளிலே வெள்ளையடிப்பது போல
பூமிக்கும் ஓரு முறை பச்சையடிக்கனும்,
பூமியி்ன் பசுமை மாறாம காக்கனும்!!!

எழுதியவர் : இரா.கிருஷ்ண மூர்த்தி (3-Nov-14, 8:10 pm)
பார்வை : 547

மேலே