மழை
வளியால் வந்தாய்-நல்
வழியை கண்டாய்
வலியை நீ சுமந்து
வசந்தம் தந்தாய்!!
இரவா? பகலா ?
அறியா உன் செயலே
செல்லும் வழி பகலானாலும்
இரவாய் மாற்றும் நீ அதிசயபிறவி !!
பல்லுயிர் புத்துணர
பலியாய் உனை படைத்தானோ
பழியை நீ சுமக்க
பளையமும் படையலும் அவன் ருசிப்பானோ !!
பிளந்த வாய் மூட
நீ வந்து நுழைந்தாய் மண்ணில்
கண்ணீரில் மிதந்த மனிதனுக்கு
பருகும் தண்ணீராய் நீயானாய் !!
அதிக ஆசையும்
அதிக ஆனந்தமும்
அவஸ்தையில் முடியுமென
உன் ஆனந்த தாண்டவம் உணர்த்தியதே !!
அமைதியாய் பொழிகையில்
மனிதன் ஆனந்தம் கொண்டான்
உணதானந்த தாண்டவம் கண்டு
மனிதன் ஆட்டம் கண்டான் !!
இருப்பதை நேசி !
இறைவனை பூசி !
இயற்கை என்றும் அற்புதமே
இருக்கும் வரை மௌனமாய் யோசி !!

