பெண்மை

உன் காதலை மறைத்து
பொய் பேசுகிறாய்..
அந்தப் பொய்களை
குறிப்பெடுத்து வந்தேன்..
ஓராண்டுக் காலமாய்!

எழுதிப் பார்த்த
பின் தான் புரிந்தது..
ஒவ்வொரு பாகத்திலும்..
ஒவ்வொரு பக்கத்திலும் ..
காதலே அதில்
நிரம்பியிருந்தது!
எனக்கே தெரியாமல்
எப்போது ஊற்றி விட்டுச் சென்றாய் ..
என் பேனாவில்
காதல் மை!
அருமை..!
பெண்மை!

எழுதியவர் : கருணா (4-Nov-14, 1:42 pm)
Tanglish : penmai
பார்வை : 111

மேலே