+பாவாடை தாவணி+

பாவாடை தாவணி
பார்த்த மாதம் ஆவணி
அழகான காதணி
அழகிழும் அழகாய் காலணி
பார்வைக்கு பூரணி
காதலில் விழக் காரணி
கவிதையூரும் ஊருணி
உடுத்தும் உடுப்பில் சாரணி
பார்வையிலோர் மின்அயனி
அவளது தடத்தில் நானோர்பயணி
இதயத்திலில்லையோ தமனி
எப்போதாவது என்னையும் கவனி