அந்தி வானம் சிவந்திருப்பது ஏன்
அன்று ஒரு நாள்....
அந்தி நேரத்தில் - என்
காதலிக்காகக் காத்திருந்தேன் ...
வழக்கம்போல் என்னவள்
என்னை சந்திக்க வந்தாள்.
அது ஒரு மலைப்பிரதேசம்.
யாராலும் கண்டுபிடிக்க முடியாத
இடம் அது .
என்னவளைப்பார்த்து
எனக்கு என்ன கொண்டுவந்தாய்?
என்று கேட்டேன்..
அவள் கைகளை விரித்து
ஒன்றுமில்லை என்றாள்.
நான் கொண்டுவந்திருக்கிறேன்
தரட்டுமா என்றேன் !...
எங்கே கொடுங்கள்
என்றாள் ...
நான் அவளை
அருகழைத்து - ஒரு
முத்தமிட்டேன்
வெட்கத்தால் அவள் முகம்
சிவந்து போனது .
கடலின் நீல நிறத்தை வாங்கிப்
பிரதிபலிக்கும் வானம் -
அன்று முதல் ....
அந்தி நேரத்தில்....
என்னவளின் கன்னச்சிவப்பை வாங்கிப்
பிரதிபலிக்கத்தொடக்கிவிட்டது.

