என் காதல்

என்னென்று சொல்வேன்
என் காதலை,
உவமை கட்டி உரைக்கவா??
சந்தங்கள் கொட்டி பறைக்கவா??
இல்லை,
தமிழைக் கோர்த்து பாய்விரிக்கவா??
என்னைக் கேட்டால்
போதாது இவை மட்டும்
உன் அழகுக்கு மெருகூட்ட..
ஆயினும்,
தமிழ் அன்றேல்
பொலிவு கொள்ளாது
உனக்காய் நான் கொணரும் கவி...
வேடன் தானொருவன்
வீசிய வலையினிலே
புறாக்கள் சிக்கிய கதையுண்டு..
புறா யிட்ட வலையினிலே
வேடன் விழுந்த கதையிருக்கா??
உள்ளதடி தோழி
உன் வலையில் நான்..
சொக்கி இழுக்கும் கடைகண்ணால் ஏ(மே)வி
என் கூட்டினுள்ளே கொக்கி போடும் தேவி
உனக்கே எந்தன் உயிர் என்பேன்.
உனக்காய் பிரிந்தால்
"உயிரே!!!" போ என்பேன்..
கொய்யா கிளையிடையே
கிளி கொறித்த பழம்
சுவைக்கு ஊட்டும் பலம்.
பழமே சுவையேன்றால் கிளியோ??
பெண்ணே!!
நீ பழமல்ல கிளி..
இத்தகு உவமை உரைப்பேன்
எனவாக எண்ணினாயோ தோழி??
உண்மை உரைக்கிறேன் கேள்.
தேவாங்கு முகம்
தேறாத ஜன்மம்
நாசமாப்போக!
நாலுப்பேர் தூக்கப்போக!
அட! அச்சம் தவிர் தோழி.
இவை உனக்கன்று
என்னூர் மக்கள்
எனக்காய் கௌரவித்த பட்டங்கள்..
இயற்பெயரில் வள்ளுவனையும்
என் பின் தள்ளிய பட்டங்கள்..
பட்டம் அளித்தவர் பட்டியலில்
என் தாயும் ஒருத்தி என்றெண்ணி
பெருவெள்ளம் என் விழிகண்டு
வழியறியா நான் திரியும் வேளையில்
எங்கிருந்து வந்தாயோ??
ஏனடி எனக்கு
"காதலன்"
எனும் பட்டம் தந்தாயோ??.
Address :
K.RAGUL , ROOM NO 106 (MANDHARAI ),
ENGG COLLEGE HOSTELS ,
ANNA UNIVESITY ,
CHENNAI 600025..