உன்னில் வாராதா
உன்னோடு வாழ்வதற்கு
தினம் தினம் சாபவன் நான்
உன் மௌனத்தால்
கரைந்திடும் வானவில் நான்
கவிதையால் அளந்தெடுத்து
வார்த்தையால் வர்ணித்து
கனவினை மொழி பெயர்த்து
என் காதலை சொல்லுகின்றேன்
உணர்வுகள் புரியாதா
உன் மொழி கிடையாதா
காதல் நினைப்புகள் மட்டும்
உன்னில் வாராதா