வாக்கியம் கற்றுத்தந்த வாழ்க்கை

வாக்கியம் ஓன்று
வகுத்துத் தந்தது
வாழ்க்கையின் இலக்கணம்
தொடரும் தோல்வியால்
துவண்ட மனம்
கேள்விக்குறியாய் குழப்பம்?
விடாது முயற்சிக்க
கற்றுக் கொடுத்தது
காற்புள்ளி,
தோல்வியின் பாதையிலே
வெற்றி உள்ளதை
சுட்டிக் காட்டியது அரைப்புள்ளி;
எட்டும் தூரத்தில் தட்டிப் பறிக்க
கனியைக் காட்டியது
முக்காற்புள்ளி:
உச்சத்தை அடைந்து விட்டதாய்
சொன்னது முற்றுப்புள்ளி.
பெற்ற வெற்றியை
அடைப்புக் குறியிட்டு()
வாழ்க்கையைத்
தொடரச்சொன்னது
வாக்கியம் .