வாழ்வுமலர் வீதியில் -சந்தோஷ்
என்னை நீயும்
உன்னை நானும்
தேடியதே இல்லை..!
உண்மைதானே பெண்ணே?
நம்மிருவருக்கும்
காதல் என்றால்
பாகற்காய் கசப்பு?
உண்மைதானே கண்ணே?
பிறகு எப்படி எப்படி
இந்த பந்தம்...?
தினம் தினம்
இதோ இந்த
வாழ்வுமலர் வீதியில்தானே
நானும் சென்றிருந்தேன்.
ஒருமுறைக்கூட உன்னை
நான் கண்டதில்லையே
ஒருமுறைக்கூட நீ
என்னை கண்ணடித்ததில்லையே !
ஓ...!
என் நிழலுக்குள்
ஒளிந்துக்கொண்ட
திருமண நறுமணம்
நீதானோ ..?
நிழலில் தொலைத்த
கனவு வினாக்களை
நிஜத்தில் எழுதவரும்
என் ஆன்மா
நீதானோ ?
நீதானோ ..!இனி
எனை வாழவைக்கும்
என் வாழ்வுப்பூவோ?
நீதானோ..~! இனி
என்னை பராமரிக்கும்
காதல்
வைத்திய மலரோ ?
அதுனால்தானோ
என்னவோ ?
இன்று என்
நாசி வழியே
நுரையீரலில் கலந்து
இதயத்தில் வாசம் செய்கிறாயோ
என் காதலியாக?
காதலிப்போம்...!
சற்று நிதானமாகவே...!
சரிதானே.. ! - என்
காதல்நகர் தலைவியே...!
---------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்