வாசிக்க படாத வரிகள்
அம்மா ....
உனக்குள் நானிருந்த ஒவ்வொரு நொடிகளும்
உன் மனதில் தோன்றிய எண்ணங்களும்
வாசிக்கபடாத வரிகள் ....
தண்ணீரில் வாழும் மீன்களின்
கண்ணீர் கதைகள் யாரும்
வாசிக்கபடாத வரிகள்...
நன்னீர் விரும்பி
மழைநீர் சேர்க்கும் மானிடர்
மேகம் சுமந்த அழுக்குகள்
வாசிக்கபடாத வரிகள் ...
பெண்ணே ...
உந்தன் காதலில் விழுந்த
முதலும் முடிவும்
துடித்த என் இதயத்தின் அதிர்வுகள்
வாசிக்கபடாத வரிகள்...
கடலின் உப்பை சுவைத்து
நீரை ஒதுக்கிமாசை கலக்கும் மனதை எண்ணி
அலைகள் துடிக்கும் துடிப்புகள்
வாசிக்கபடாத வரிகள்...
வறண்ட வானின்
புற்று கோடுகள்
பரந்த மனதின் இறுக்கம்
வாசிக்கப்படாத வரிகள்...
வசிக்க வசிப்பிடமும்
சுவாசிக்க சுத்தகாற்றும்
புசிக்க சுவையுணவும்
தேடும் மனிதன் சுற்றுபுரத்தின்
அசுத்தங்களை பற்றிய சிந்தனைகள்
வாசிக்கபடாத வரிகளாய் ....