கடவுள்

கடவுள் மறுப்பு :::: ஹப்பா போன நூற்றாண்டுல இத பேச முடியுமா???
இல்ல இப்ப அரபு தேசத்துல தான் இத சொல்ல முடியுமா???
அடிப்படையை ஆராய்ந்தால் இப்போதும் கடவுள் எதிர்ப்பை பலர் எதிர்க்கிறார்கள் கடுமையாகவே .. நல்லது தான் அன்று உலகை காப்பார் வல்லவர் கடவுள்னு சொன்னாங்க இன்றைக்கு கடவுள் இருக்காரு அப்படீனு கடவுள காப்பாத்த சில கூட்டம் படாத பாடு படுது. . . . .
கடவுள் நம்பிக்கை எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை போலவே நம்மள திடீருனு அம்மன் வந்து காப்பாத்தாதா.,மாதா வந்து காப்பாத்தாதாதுங்குற போல தான்
ஆனால் அம்மனும் வருவதில்லை மாதாவும் வருவது இல்லை., . . சக மனிதன் யாரேனும் அந்நேரம் காப்பாற்றினால் மாதாவின் அருள்., அம்மனின் சக்தி என நினைத்துக்கொண்டு கோயில்களிலும்., ஆலயங்களிலும் போய் வேண்டுதல் நிறை வேத்த வேண்டியது., .
சில வகை வேண்டுதல்கள் மிகவும் வரவேற்கப் படுகின்றன குறிப்பாக அன்னதானம் போன்றவை. . . .
சில மிகவும் மோசமாக உள்ளது வாயில் அலகு குத்துவது., பெண்கள் மொட்டை போடுவது போன்றவை. . . . .
ம்ம் இவை ஒரு புறமிருக்க. இதோ தேவன் வருகிறார்., தேவி வருகிறார் போன்ற கூட்டங்கள். . .தேவனும் தேவியும் கூட்டமும் உபதேசமும் நடத்துகிறவர்களை மட்டும் இரட்சித்து இருக்க கூடும் என்றே நினைக்க தோன்றுகிறது. . அவர்கள் ஆடம்பரமாக சொகுசாகவே வாழ்கிறார்கள்., . .
பாவம் மக்கள் உயர் மருத்துவ செலவுக்கு பணமில்லாதார்கள் தேவனை நம்பி தேய்கிறார்கள்.. தேவன் ஏன் அத்தகைய பிணிகளை அளிக்க வேண்டும்???
ஜோசியம் ஜாதகம் இவை பல ஏழைகளின் திருமணத்தை தடைசெய்வதாகவே உள்ளன., .
செவ்வாய் தோசம்? ? மங்கல்யான் செவ்வாயை படம் எடுத்தே அனுப்புகிறதே. . . குரு பெயர்ச்சி? ?? வியாழன் கிரகம் இடம் பெயர்ந்தால் நமக்கென்ன??? இவையும் ஒரு கும்பலுக்கு பணம் தேடீ கொடுக்கும் வழி., ஏழைகளை ஏமாற்றும் பணம் நிலைக்குமா???
சிந்திக்க மதங்கள் மனிதனை தடுக்கின்றன., . . தேவனை பழிப்பது பாவம்., . . அதை உங்கள் தேவனே நேரில் சொன்னதாகவும் சொல்லுவார்களே ஆம். . . தேவனை மூவேளை தொழுதோர் நிலை என்ன?? 200 ஆண்டு நீண்ட ஆயுளா?? கோயில் பொய்டு வாரான் விபத்துல சாகுரான்? ? கடவுள் சொர்க்கத்தை காட்ட அவனை அழைத்தாரா??? அவன் குடும்பம் பாவம் என்ன தவறு செய்தது?? முவேளை அவனை தொழுததை தவிர?!!
குடும்பத்தையும் அழைத்திருக்கலாமே தேவன். . .
இன்னும் தேவனும் தேவியும் வாழ்ந்து மக்கள் குறைகளை தீர்க்கணும்

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (8-Nov-14, 11:56 am)
Tanglish : kadavul
பார்வை : 192

மேலே