என்ன புள்ள வளத்துருக்க நீ-வித்யா
என்ன புள்ள வளத்துருக்க நீ......-வித்யா
காதல் கனவுகளில் நீந்தி...ஊடலின் சாட்சியாகவோ....கூடலின் சாட்சியாகவோ பெயருக்கு இரண்டு பெற்று போட்டுவிட்டு எல்லாம் யாருக்காக என் புள்ளைக்காக தான் என்று கூறினால் கடமை முடிந்திடுமா என்ன.....?
இன்றைய இளைஞர்களை குறைக் கூறுகிறோம் இன்றைய பிஞ்சுகளின் எதிர்காலம் எப்போதோ பழுத்துவிட்டது தெரியுமா...? அதற்காக நாமெல்லாம் என்ன செய்ய போகிறோம்.....?
டேய்....மகாபாரதம் நாடகம் யாரெல்லாம் பாத்துருக்கீங்க......கை தூக்குங்க......!! சரி நீ சொல்லு பா....... கதை என்ன... போங்க சார் கிருஷ்னர் பொறந்தா அவுங்க குலமே அழிந்சுடும்னு தெரிஞ்சும் எதுக்கு அவுங்க அப்பாவையும் அம்மாவையும் ஒரே ரூம்ல அடைச்சு வச்சாங்கன்னு 6ஆம் வகுப்பு மாணவன் கேற்றுக்கான்.......
இவனை ஒப்பிடும் போது பன்னிரண்டாம் வகுப்பில் இனப்பெருக்க உயிரியல் பாடத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றிய சந்தேகம் கேட்ட என் வகுப்பு மாணவனை கொஞ்சம் உயர்வாக நினைக்கிறேன்.......!!
பாப்பா chottaa பீம் பாரு.... ஹே வித்யா நாங்க எல்லாரும் சின்ன முள்ளு 6 க்கு வந்தா ஆட்டுக்குட்டி ஆண்டியும், டாக்டர் அங்கிள் வர்ற படம்தான் பாப்போம்..... பாவம் அந்த ஆன்டி....எப்பவும் அழுதுட்டே இருப்பாங்க...... சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க...... திருத்தம் எங்க வீட்ல இருந்தே ஆரம்பிக்கணும் போல......
அவர்கள் வளர வேண்டியவர்கள்.... நாம்தான் அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.... அவர்களுக்கு உள்வாங்கும் திறன் அதிகம்.... ஆதலால் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல விசயங்களை அவர்களில் புகுத்த முடியுமோ அவ்வளவும் செய்திடுங்கள்....... கொஞ்சம் தவறுகளை சரிகளிளிருந்து பிரித்தறிய சொல்லிக் கொடுங்கள் போதும்........