நெற்றியில் குங்குமம் வைப்பது எப்படி
பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் வைக்கவேண்டும் என்று முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர் .இதற்கு அழகு மட்டுமல்ல உடல்நலமும் காரணம் .
மனித உடலில் தெய்வசக்தி வாய்ந்ததாக 6 இடங்கள் குறிபிடபபடுகின்றன .அதில் முக்கியமானது நெற்றிக்கண் . இரண்டு புருவங்களுக்கு நடுவில் உள்ள பகுதியையே நெற்றிக்கண் என்று கூறுகிறோம் . நெற்றிக்கண் மீது குங்குமம் வைத்தால் அமைதி கிடைக்கும் . ஹிப்னாடிசம் உட்பட எந்த சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு .
மஞ்சள் ,வெண்காரம் ,படிகாரம் ,எலுமிச்சை சாறு , நெய் ஆகியவற்றை கலந்து குங்குமம் தயாரிக்கபடுகிறது .இவை அனைத்துமே கிருமி நாசினி பொருட்கள் . உடலிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்புகள் எடுத்துச்செல்லும் உஷ்ணத்தை கட்டுபடுத்துவது நெற்றிப் பகுதி . அந்த பகுதியில் குங்குமம் வைத்தால் உஷ்ணம குறையும் . குங்குமத்தின் மீது சூரிய ஒளி படுவதால் குங்குமத்தில் உள்ள மூலிகை சக்த்திகளுடன் வைட்டமின் சக்த்திமிக்க புறஊதா கதிர்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கிறது . இந்த சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது . அதனால் தான் குங்குமம் வைக்காமல் பெண்கள் இருக்ககூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினார்கள் .
ஆகவே பெண்கள் ஓட்டும் (ஸ்டிக்கர் ) பொட்டுக்களை தவிர்ப்பது நல்லது . மஞ்சள் குங்குமம் வைத்து மகாலக்ஷிமியாய் காட்சி தாருங்களேன் .
நன்றி .
வசிகரன். க