தோழர்களுக்கு வணக்கம்-கே-எஸ்-கலை
November 8, 2014 at 12:58am
அண்மையில் திரைத்துறை பற்றியும்திரைப்படங்கள் பற்றியும் சில காட்டமான பதிவுகளைச் செய்திருந்தேன். இன்றைய திரைத்துறைஎன்னுள் இருந்து எழுதியவையே அவை.
இருப்பினும் திரைத்துறையில் நான் பெரிதும்காதலிக்கும் ஒரு கலைஞன் இருக்கவே இருக்கின்றார். அது உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே.
ஒரு நடிகனாக, கலைஞனாக யாருமே நெருங்கிவிடவிட முடியாத உயரத்தில் இருக்கும் இந்த கலைஞனின் சில படங்களை நான் முற்றுமுழுதாகபார்த்து ரசித்திருக்கிறேன் !
ஆனால்...இதுவரை நான் பார்த்த அனைத்துதிரைப்படங்களிலும், ஒரே ஒரு படம்....நாடி நரம்பெல்லாம் புல்லரிக்கச் செய்த ஒரு படம்....கலைத்துறைக்குஒரு கலைஞன் செய்யவேண்டிய கடமையை உணர்த்திய மகா உன்னத படம்....என்றால் அது “சலங்கைஒலி” தான் !
இந்த திரைப்படத்தை நான் இப்படி கூறுவதற்குஎன்ன காரணம் இருக்கும் என்று இந்த படத்தைப் பார்த்த எவரின் மனத்திலும் கேள்விகள்எழாது என்றே எண்ணுகிறேன் !
இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சி..”ஓம்நமசிவாயா....” என்ற பாடலுக்கு ஷைலஜா ஆடும் நாட்டியம். அந்த நாட்டியத்தை கீழே உள்ளவிழியத்தில் காணுங்கள்....
www.youtube/embed/fFtTPz9h9jY
மேலுள்ள விழியத்தை இங்கு இணைத்தமைக்கும் நான்இந்த உரையை எழுதுவதற்கும் சில காரணங்கள் உண்டு.
ஷைலஜாவின் நாட்டியத்தைப் பலரும் கைத்தட்டிப்பாராட்டுவதும், அரங்கில் அமர்ந்திருக்கும் கமலின் செய்கைகளுக்கும் இடையில்இருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது ! ஏன் ? எதற்கு ? என்று நீங்கள் கேள்விஎழுப்பலாம்.
சொல்லுகிறேன்....
ஒரு உண்மையான கலைஞன்...கலை என்ற மிகஉன்னதமான துறையை கூறுபோடுவதை விரும்பமாட்டான். அந்த கலைஞன், கலை என்ற ஒன்றுஅசிங்கப் படுத்தப் படும் போதும்..அரைவேக்காட்டு கலைஞர்களால் அரைகுறையாக சீரழிக்கப்படும் போதும் கொந்தளித்து எழுவான். எழவேண்டும் ! அதை தான் கமலின் அந்த அசௌகரியபேதம் உணர்த்துகிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் !
மேலே உள்ள ஷைலஜாவின் நாட்டியத்தை சரிவரஅவதானித்தால் பல விடயங்களை நாங்கள் அவதானிக்கலாம். ஒரு படைப்பாளி முழுமையடையவில்லைஎன்பதற்கான பல மேற்கோள்களை எடுத்துக்காட்டுக்காக காட்சியாக்கி இருக்கிறார்கள்.(மூக்குத்தியை சீர் செய்வது போன்ற..) ஆனால் அந்த சபையில் கமலஹாசனை ஒதுவிட்டுப்பார்த்தால் அங்குள்ள அனைவருமே சைலாஜாவிற்கு உரமூட்டும் வகையில் கைத்தட்டி ஆர்ப்பரிப்பதைக்காணலாம்.
நான் அடிக்கடி என்னுடன் இருப்பவர்களிடம்சொல்லும் ஒரு வாசகமுண்டு. “எது சரி என்று தெரியாதவனுக்கு எது தப்பு என்று நிச்சயம்தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை !”
என்பது அது ! அந்த சபையோரும் அப்படித் தான்இருக்கிறார்கள்.
ஆனால் சரியாக தெரிந்து வைத்திருக்கும்கமலால் அந்த நாட்டியத்தை அறவே ஜீரணிக்க முடியாது திணறுவதை காண்கிறோம் ! இதுகுறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும் அல்லவா ? எதற்காக இதனைச் சொல்லுகிறேன் என்பதைபார்பதற்கு முதல் கீழுள்ள இந்த விழியத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு வாருங்கள் !
/www.youtube/embed/M5KpxQysdmo"
சரி...சலங்கை ஒலி பற்றிய இந்த விவரிப்புகள்ஏன் இந்த நடுச்சாமத்தில் உனக்கு என்று உங்களில் சிலருக்குள் கேள்விகள் எழலாம்.காரணமாகத் தான் இதைச் சொல்ல வந்தேன் !
தமிழ் கலைகள் ஒட்டுமொத்தமாக சுடுகாடு நோக்கிபயணித்துக் கொண்டிருப்பதை ஆங்காங்கே பரவலாக காணக்கூடியதாக இருக்கிறது ! இதற்குஎன்ன காரணம் என்பதை மேலுள்ள சலங்கை ஒலி பாடல் காட்சிகள் தெளிவாக சொல்லுகின்றன !
கலை எதுவாக இருந்தாலும் அதை ஆழ்மனத்தால்காதலித்து செய்யுங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்ளவே இதனை எழுத விழைந்தேன்.
எழுத்து என்ற கலையுடன் சங்கமிக்கும்நாங்கள் எழுத்தால் குப்பைக் கோபுரங்களை கட்டிக் கொண்டே போகிறோம் என்பதை நினைக்கநினைக்க மனம் கொந்தளித்துத் துடிக்கிறது தோழர்களே !
எந்த கலையாக இருந்தாலும் அது உன்னதமானநிலையை அடையும் போது தான் கௌரவிக்கப் பட வேண்டும்...அது உன்னதமான நிலையை அடையுமுன்கௌரவிக்கப் படக் கூடாது..மாறாக செப்பனிடப்பட்டு ஊக்குவிக்கப் பட வேண்டும் ! ஆனால்இன்று பல இடங்களிலும் ஊக்குவித்தலுக்கும் கௌரவித்தளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுபுரிந்துக் கொள்ளப் படாமல் இருப்பதைக் கண்டு கவலையடைகிறேன் !
ஒரு கலையை அங்கீகரிக்க பிரதான காரணி, அந்தகலையின் அசலான தரமே அன்றி வேறெதுவும் இருத்தல் கூடாது. உபகாரணிகளை மையப்படுத்தி ஒருகலைஞனை அரைகுறையாக்கி எதை சாதித்துவிடப் போகிறோம்? என்ன பலனை அடையப் போகிறோம்?எந்த இலட்சியத்தை அடையப் போகிறோம்? சிந்திக்க வேண்டாமா தோழர்களே ?
தோழனுக்காக கைத்தட்டுவதில் எந்த தப்பும்கிடையாது...ஆனால் கைத்தட்டி கைத்தட்டியே தோழனுக்கும், கலைத்துறைக்கும்ஒரேநேரத்தில் குழிவெட்டி புத்தைத்தல் நியாயந்தானா ? இந்த பேரவலமல்லவா? இதனை தடுக்க/தவிர்க்கவேண்டாமா தோழர்களே ?
அன்புள்ள தோழர்களே....சற்றேசிந்தியுங்கள்....
இணைய தளங்களின் வளர்ச்சியும், அவை நமக்குதந்துக்கொண்டிருக்கும் விசாலமான இந்த இலக்கியப் பாதையும், நமது அடுத்த தலைமுறையின்வெளிச்சமான வாழ்விற்கு ஆணிவேராக இருக்க வேண்டும் !
தரமுள்ள படைப்பாளிகளை, ஆக்கங்களை மட்டுமேகௌரவியுங்கள்....வளரும் படைப்பாளிகளுக்கு ஊக்குவித்தலை மட்டுமே செய்யுங்கள். பதக்கமும்விருதும் பொன்னாடையும் பொற்கிழியும் கொடுத்து ஊக்குவிக்க தயவு செய்து முன்வராதீர்கள்.இவையெல்லாம் தரத்தில் உயர்ந்த முழுமைபெற்ற படைப்பாளிக்களுக்கு மட்டுமே உரிய சொத்துஎன்று எண்ணுங்கள் !
வெறுமனே குப்பைகளை கும்பிட்டு கூத்தடித்துஅடுத்த தலைமுறைக்கு, கடும் அமிலத்தை அதிரசப் பானமென கொடுத்துவிடக் கூடாது என்பதில்கரிசனைக் காட்டுங்கள் ! உளப்பூர்வமாய் உணருங்கள் !
அடுத்த தலைமுறை என்பது எனதும் உங்களதும்குழ்ந்தைகளேயன்றி வேறு யாரும் அல்ல ! நமது குழந்தைகளை நேசிக்கும் அளவிற்கு நமதுகலைகளையும் நேசிப்போம் !
சலங்கை ஒலி என்று சொன்னால் அங்கே சலங்கைஒலி தான் இருக்க வேண்டும்....சலசலப்பு அல்ல !
நான் சொல்ல வந்ததை முழுமையாகசொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை..ஆனாலும் நீங்கள் முழுமையாக புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்....
நான் சொன்ன ஏதேனும் உங்களைக் கஷ்டப்படுத்திஇருந்தால் இதோ இந்த பாடலைக் கேளுங்கள்....கஷ்டம் போய்விடும் !
https://www.youtube/watch?v=Te1dMYRWXOc
-----------------------------------------------
(youtube என்றிருக்கும் இடத்தில் ".காம்" என்று சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது என்னுடைய எண்ணம் பகுதியில் இதே கட்டுரையுடன் இருக்கும் காணொளிகளைப் பாருங்கள்)
(பகிருங்கள்...முரண்பாடுகள் இருப்பின்சொல்லுங்கள் )