என் தந்தை

நிழலாய் தொடர்ந்தாரே ..... என் நிழலையும் சுமந்தாரே .....

காற்றாடி போலே நானும் அன்று திசைகள் அறியவில்லை ...
அதன் நூலாகவே நீயும் எனைக்கட்டி வைத்ததென்ன...

பள்ளி செல்ல மாட்டேன் என்று...
அடம் பிடித்த போது நின்று...
உன் தோளிலே எனைச்சுமந்து சென்று...
தோழனாய் நீ நின்றாய் வந்து.....

வானை எட்டிப்பிடிக்க முயன்றேன் நான் அன்று... சொன்னாய் என் மகனே....
வானை நீ எட்டிப்பிடிக்கும் போது...
நானும் உன் வானில் ஒரு நட்சத்திரமாய் நிற்பேன் என்று...

புதிரானதே நீயும் சொன்ன சொல்லும் அன்று...
விடை தேடினேன் நானும் இன்று...
என் வானில் ஒளிரும் நட்சத்திரமே நீ என்று...
நன்றி சொல்ல துடிக்கிறேன் என் தந்தையே நான் இன்று .

எழுதியவர் : தோழி பஹீமா... (9-Nov-14, 7:29 pm)
Tanglish : en thanthai
பார்வை : 132

மேலே