நாளும் பொழுதும் காத்திடு

​பட்டம்விடும் பருவத்தில்
சட்டையின்றி விளையாடு !
பாலகனாய் மாறிவிட்டால்
கல்வியுடன் விளையாடு !

வாலிபத்தை அடைந்தால்
சமுதாயத்தை எடைபோடு !
வாழ்ந்திடும் காலம்வரை
நல்வாழ்விற்கு வழிதேடு !

கணவனென நிலையானால்
மனைவியை மகிழ்வித்திடு !
தந்தைநிலை வந்திட்டால்
பிள்ளைகளை கவனித்திடு !

வளர்ந்திட்ட செல்வங்களுக்கு
கடமைதனை செயலாற்றிடு !
தாத்தாஎன உயரும்போது
தன்னிறைவுடன் வாழ்ந்திடு !

ஓய்வுபெறும் காலம்வந்தால்
சாய்வாக அமர்ந்து ஓய்வெடு !
நினைவலைகள் மோதும்போது
நிம்மதியாய் அதை அசைபோடு !

உடல்நிலை ஒத்துவந்தால்
சமுதாயத்திற்கு பாடுபடு !
கடலான நம் சமூகத்திற்கு
கடமையென நினைத்திடு !

உள்ளவரை உலகைநினை
ஊருக்கும் உழைத்துவை !
நம்மினம் நம்மொழியை
நாளும் பொழுதும் காத்திடு !


​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Nov-14, 8:59 am)
பார்வை : 171

மேலே