பாமரனின் உலறல்
இந்த வாழ்க்கை யாருக்கும் சொந்தமில்லடா
இன்ப வாழ்வு எப்பவும் நிலையில்லைடா……
ஏழை என்றாலே எலக்காரம் தானடா….!
அவனென்ன புளித்துப்போன பலகாரம்-மாடா ?
காசுப் பணம் இருந்தா ஆளை மதிக்கும் உலகம்
கையில் காசு கறைஞ்சா தூரத் தானே விலகும் !
புகழ் இருக்கும் வரைக்கும் போற்றிப்போற்றிப் புகழும்
புகழ் குன்றிப்போனா தூற்றித்தூற்றி இகழும் !
லஞ்சம் வாங்கி வாங்கிப் பழகிப்போன தேசம்
அஞ்சாமல் நம்மை பாழும் குழியில் தள்ளும்
ஏழை வயிறெரிஞ்சி கொடுக்கிற தம்மாத்தூண்டு லஞ்சம்
அன்றவன் வீட்டூல சாப்பாட்டுக்கே பஞ்சம் !
நாட்டரசன் கோட்டைக்கட்டி வாழ நெனச்சோம்
நாரிப்போன வாழ்க்கைதான் நமக்கு மிச்சம் !
கல்லறைக்குப் போனாலும் சில்லரைதான்
சில்லரை இறைக்கலனா நமக்கும் கல்லறைதான் !
ஆறடி எடத்துல இப்போ மூனடிதான் மிச்சம்
இனிவரும் காலத்துல மிஞ்சுமா சொச்சம் ?
தங்கி இருக்கும் எடத்துக்கும் வந்தது பங்கம்
வங்கி கடன் கட்டலன்னு செஞ்சது அசிங்கம் !
எல்லோருக்கும் ஓர் நாள் சாவுதான் !-அது
வரும்வரைக்கும் உடல் முழுக்க நோவுதான் !
மருத்துவம் பார்க்காமல் நம் வாழ்வுதான்
முடியுமா நீ சொல்லு பார்க்கலாம் ?
பகல் வேஷம் போடுறோம், பல இடங்களில் அலையுறோம் !
இரவானால் நாமெப்போ நிம்மதியா உறங்கினோம் ?
முகமூடி அணியுறோம், முழூ பூசணியை மறைக்கிறோம் !
எல்லாம் செஞ்சென்ன செம்மையாவா சாகுறோம் ?
இருக்கும் பணத்தை ஏழைக்குக் கொடுத்து புண்ணியத்தைத் தேடு
இல்லாதவன் உன்னை வாழ்த்தினால் அதுதான் உனக்கு பெரும் பேரு !
நாலு பேருக்கு நன்மை செஞ்சோம் என்ற நிம்மதியோடு
நாராயண பகவானிடம் நி சென்று நமஸ்க்காரம் போடு !

