ஊர் இல்லை
ஒரு ஊரே இல்லை
நாட்டின் அபிவிருத்தி தோட்டத்தொழிலாளர்களின்
வியர்வை துளிகளில்தான் உள்ளது
எத்தனை முறை சொல்லியிருப்பார்
நாங்கள் இருக்கும் இடம்
சவக்குழியென்று
எப்போதே சொன்னார்கலாம்
இங்கு அனர்த்தம் வருமென
தெரிந்தும் நிரந்தர இடம் வழங்கலையே
ஆர்ப்பாட்டங்கள் பல முறை செய்தும் பலனில்லை
எந்த அரசியலும் பார்க்கவில்லை
ஊர் மண்ணில் புதையுண்டது
கண் எதிரே மாயமானது
இயற்கையின் கோரம் இல்லை
மனித சுயலாபத்தின் அகோரம்
இதற்கு தாம்மில்லையென
அரசு தப்பித்தது
தேர்தல் வந்தால் பதில் கிடைக்கும்