யார் இவள்

கொடியிடையாள் இவள்
என்ன மயிலினமா ?
இல்லை
கொஞ்சி கவி பாடும்
குயிலினமா?

துள்ளி ஓடும்
புள்ளி மான் இனமா ?
இல்லை
தேவர்கள் காணாத
தேவதையா ?

நளினத்தின் நங்கையா ?
நடையில் கங்கையா ?

கம்பன் கவி வடித்த
கற்பனையா.?
சிற்பிகள் கைபடா
பொற் சிலையா ?

கானகத்தில் காதல் செய்யும்
பெண் தானா.?
இல்லை காளையரை ஏமாற்ற வந்த
பொய் மானா?

எழுதியவர் : கயல்விழி (10-Nov-14, 2:32 pm)
Tanglish : yaar ival
பார்வை : 212

மேலே