அத்தி பூத்தாற்போல்

அத்தி பூத்தாற்போல் என்பார்களே !
அது இன்றுதான் நண்பர்களே !
அசைந்தாடும் மயிலிறகின் இமை
வருடல் எப்படி இருக்கும் !
ஆண்டுகள் பல கடந்து அவள்
அழைத்த அண்ணா என்ற வார்த்தை
சொன்னது எனக்கு !
வருடங்கள் உருண்டோடி
வயதான பின்னும்
மழலையாகவே என் தங்கை
மனம் முடித்த பின்னும்
விளையாடிக்களிக்க துணையாக
என் மைத்துனனும்
வீடெல்லாம் சிரிப்பொலி
வேறு என்ன வேண்டும்
இந்த அண்ணனுக்கு
என் தங்கை மனம் மலர்ந்திருக்க !
ஒற்றை ஆசைதான் எனக்கு
என் மார்மீது என் மருமகனின்
கால் உதைக்க வேண்டும் !
மழைக்கால கார்முகிலாய்
அவன் பனீரால் என் முகம்
நனைக்க வேண்டும் !
எத்தனை நாள் காத்திருக்க !
என் அன்புத் தங்கையே !
உன் மகனை நான் முத்தமிட
என் மைத்துனனிடம் கேட்டுச் சொல் !