துணிந்து நிக்குறோம்

தூங்கி எழுகையிலே - புள்ள
மன்னனவன் நெனப்பு வந்து
மறுபடியும் படுத்தேனே
கனாக்காணும் ஆசையில!

சோறு தண்ணி இல்லாம
ராசா எனக்காக காத்திருக்க
சோல பசுங்கிளியா
இங்கிருந்தே காயுறேனே!

ஊரு சனம் அத்தனையும்
கூடி நின்னு மாருதட்டி
செஞ்சநூறு சூழ்ச்சியால
சேருவது நின்னுடிச்சே !

ஓடிப் போயி வாழணுன்னா
ஒத்த நொடி போதுமடி
அக்கிரமத்த தட்டிக்கேக்க
பொறுத்திருக்கோம் நாங்களடி!

சாதி சனம் மத்தியில
நிமிந்து வாழத்தான் ஆசையடி
எம்புருஷன் ஆகப்போறான்
எங்கியுமே ஓடமாட்டான் !

எழுதியவர் : கருணா (12-Nov-14, 9:53 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 630

மேலே