எங்கே போனார்கள்

தள்ளாத வயது
தள்ளு வண்டி
பால் போடும் ஆயா...
கூனல் முதுகு
கம்பின் துணை
கையேந்தும் மூதாட்டி...
சுருங்கிய தோல்
மங்கிய பார்வை
செங்கல் உடைக்கும் மூதாட்டி...
நடை மேடை
கால்களை நீட்டி
காசு கேட்கும்
பாவப்பட்ட பாட்டி...
காந்தி சிலை,
வயிற்று வறுமை
கம்பூன்றி
கையேந்தும் முதியவர்...
எங்கே போகிறது மனிதம்...!!!???
எங்கே போனார்கள்,
இவர்கள் பெற்ற அனாதைகள்...???
அரவணைப்போம் பெற்றவரை...
ஆதரிப்போம், அனாதையை பெற்றவர்களை...
(பெற்றவரை ஆசிரமத்தில் விடுபவரும், ரோட்டில் விடுபவரும் அனாதைகளே...)