என் காதல்

என் காதல்
சரி என்றால் சம்மதம் சொல்லடி பெண்ணே...!
"வானில் இருக்கும் நட்சத்திரம் அனைத்தும் வலைவீசி பிடித்து வந்து உனக்கு பரிசாக தருகின்றேன்"
"இரவில் வரும் நிலவை பிடித்து உன் இடது கைவிரல் மோதிரம் செய்து தருகின்றேன்"
"என் உள்ளங்கை இரண்டையும் வெட்டி எடுத்து அது எப்பொழுதும் உனைச்சுமக்க வசதியாய் உனக்காக ஒரு காலனி செய்து தருகின்றேன்"
"நிலவில் நீ வசிக்க வைரத்தால் ஆன வசிப்பிடம் ஒன்று கட்டித்தருகின்றேன்"
"எப்பொழுதும் விழும் மழைத்துளியை கூட என் தோழி உனக்காக மலர்த்துளியாய் விழச்செய்கின்றேன்"
"உனக்கு சரி என்றால் உலகையும் ஓர் முறை சுற்றச் சொல்கின்றேன் (நீ அமரர்ந்த இடந்திலேயே அனைத்தையும் சுற்றி பார்க்க வசதியாக).."
"ஆழ்கடலில் இருக்கும் அனைத்து உயிரையும் அவள் வருவாள் அச்சுருத்த வேன்டாம் என்று கூறி அங்கு ஆக்ஸிஐன் அடைத்த நீர்மூழ்கி கப்பலில் உனைவைத்து ஓர் முறை சுற்றி வருகின்றேன்"
"கிழக்கே உதிக்கும் சூரியனைக்கூட நீ விடிந்தவுடன் பார்க்க வசதியாய் (உன் விடுதி அறையின் மேற்க்கு ஐன்னல் வழியாக பார்க்க) மேற்க்கு திசையில் உதிக்க மேலே இருப்பவனுக்கு கடிதம் அனுப்பி வைக்கிறேன்"
"இவை அனைத்தும் சுற்றி வர ஆகும் செலவைப்பற்றிக் கவலைப்படாதே ஏதோ என்னால் முடிந்தவரை செவ்வாய் கிரகம் வரையிலாவது உனை அழைத்து சுற்றி வருகின்றேன்"
"இவை அனைத்தும் சுற்ற கால்கள் வளிக்கும் என்று கவளைப்படாதே உனக்கு சரி என்றால் கடைசிவரை உனைச்சுமந்து கொண்டே சுற்றி வருகின்றேன்"
"இவை அனைத்தும் ஆனந்தமாய் அனுபவிக்க ஆயுள்காலம் பத்தவில்லை என்று கலங்கிவிடாதே பெண்ணே..,
கட்டளையிடு,
எப்படியாவது என் உயிரில் ஒரு பகுதியை உனக்கு கொடுத்து இன்னொரு ஐன்மம் உயிர் வாழ உதவிசெய்கின்றேன்...