தொண்டடைக்க எழுவோமோ
திரு.திரு. கருமலைத் தமிழாழன் கவிதைக்குக் கருத்தாக....11 11 14 அன்று பதிந்தது...
நடிக்கின்ற முகங்கள் எல்லாம்
நம்,உயிரை எரிக்கும் போது
வெடிக்கின்ற குண்டா யன்றோ
விளங்குமெம் உடல்கள் எல்லோம்!
பொருந்தாத அறிவி யல்தான்
புண்ணிய மதங்கள் என்றால்
உருவாகும் கலவ ரங்கள்!
ஓடிடுமே குருதி தானே!
தீர்க்கின்ற எண்ணமுடன்
திடமான நெஞ்சமுடன்
ஏற்கின்ற மனிதர்களாய்
என்று,நாம் மாறுவதோ?
ஆர்க்கின்ற வன்முறையும்
அடங்காத போர்வெறியும்
வார்க்கின்ற அன்பினிலே
வலுமிழக்கும் நாளதுவே!
பெற்றுவரும் முன்னேற்றம்
பொருள்வழியில் செல்லுவதால்
இற்றுவரும் இணக்கமதும்!
இழிந்ததென பகிர்வழியும்!
சோதியெனும் மனிதாபச்
சுதந்திரத்தைத் தேடாதே
ஆதிமுதல் இனங்களுடன்
அடையாளம் கொண்டவனாய்
மோதிவரும் மனிதயினம்
முன்வைத்த பொருள்களிவை
சாதியென மதங்களெனச்
சரித்திரங்கள் பேசிடுதே!
படைக்கின்ற பொருள்மேலே
பற்றுவைத்துப் போகின்றொம்!
உடைக்கின்ற நினைப்பின்றி
ஒற்றுமையை அழிக்கின்றோம்!
வெடிக்கின்ற அணை,நீராய்
வெளிவருமே கலங்கலுடன்
துடிக்கின்ற கைகளினால்
தொண்டடைக்க எழுவோமோ?