மத்தாப்பு பெட்டி மனது
நீ துள்ளிக் குதித்து
நடையா ..ஓட்டமா
என்பது புரியாது
என்னைப் பார்க்க
வந்ததும் ..
உன்னை பார்த்தும் பாராமலும்
நான் இருந்ததும்..
என்னிடம் பேசாமல் நீ
திரும்பிப் போய்விடுவாயோ
என்ற என் அச்சமும்..
உன் இரட்டை சடை
பின்னலின் ஸ்பரிசமும்..
குனிந்து என் காதோரத்தில்
கிசு கிசுத்த தேனான வார்த்தைகளும் ..
வண்ண மத்தாப்புகளை
தீப்பெட்டிக்குள் வைத்து
போவது போல்
மனதில் எடுத்து செல்கிறேன்..
நான் திரும்பி வரும் வரை..
இந்த நோட்டுப் புத்தகத்தை
நிரப்பி வை ..
காதல்..காதல்..காதல்..
என்று எல்லாப் பக்கங்களிலும்!