கண் மை

அலங்கார பொருட்களின் குவியலில்
என்றென்றும் தனிப்பட்ட சிறப்பினில்
மையிட்டு பொட்டிட்டு பார்க்கையில்
ஐஸ்வர்யத்தின் மொத்த சிரிப்பலை

தொட்டு எடுத்து விரல் நுனியினில்
மெல்லிய கோலங்கள் வரைகையில்
கண் இமையின் விழிம்பினில்
கலை நுணுக்கங்கள் பண்பலை

திருவிளக்கின் கரிய புகைதனில்
கண்மையின் பூர்வீக நிலைதனில்
பிறர் கண்கள் படுத்தும் கெடுதலில்
இருந்து கரிய பொட்டு காக்கும் நமை

எழுதியவர் : கார்முகில் (13-Nov-14, 6:11 pm)
Tanglish : kan mai
பார்வை : 314

மேலே