அன்பென்னும் மழை-3 தேவி மகேஸ்வரன்
அசடு வழிய சிரித்த இருவரும் ஏய் நீ எந்த ஊரு . என்ன படிச்சிருக்க . என்று கேட்க வர்ஷிதா பதில் சொல்லாமல் அவர்களை பற்றி விசாரித்தாள்.
டேய் இவ என்னடா குழந்தை மாதிரி இருக்கா என்றான் வினோத்.
ஆமாண்டா அழகா, இவளை நாம கலாய்கலாம்னா இவ நம்மளை கலாய்க்கறாலே என்றான் ரியாஸ்.
ஓகே .ஓகே ரெண்டு பேரும் காத கடிச்சிகிட்டது போதும் . சாபிடுங்கப்பா என்றாள் வர்ஷிதா .
என்ன பிரண்ட்ஸ் என்ன லஞ்ச் என்றாள் வர்ஷிதா .
என்னது பிரண்ட்சா . பிரெண்ட்ஸ் நு வேற சொல்லிட்ட . இனி உன்னை கலாய்க்க முடியாது
ஏன்? என்றாள் வர்ஷிதா.
ஏன்னா எங்க பிரெண்ட்ஸ கலாய்க்கரதில்லன்னு ஒரு கொள்கைய வெச்சிருக்கோம் . அதனால நீ தப்பிச்சிட்ட என்று பெருந்தன்மையாய் சொன்னான் .
ஹேய் தப்பிச்சது யாரு வர்ஷிதாவா , இல்ல வர்ஷிதா கிட்ட இருந்து நீங்களா என்றாள் பானு .
சரி விடுங்கப்பா சாப்பிடலாமா . பசி வயித்த கிள்ளுது என்றாள் வர்ஷிதா . அந்த நேரத்தில் அவசர அவசரமாக லஞ்ச் பேகை தூக்கிட்டு ஓடி வந்தான் ஒருவன் .
என்னப்பா ஸ்டாட் பண்ணியாச்சா .
இல்ல பிரபு வா உனக்காகத்தான் வைடிங் என்றான் வினோத் .
சரி யாரு இவங்க நியூ ஸ்டாப்பா . பேரு என்ன? .
அயம் வர்ஷிதா .
பேரு சூபரா இருக்கு . என்ன முடிச்சிருக்கிங்க என்றான் பிரபு
எப்பா சாப்பிடலம்பா . இங்கதான இருக்க போறோம் அப்பறமா பேசலாமே என்றாள் பானு .
இந்தாடா என் தெய்வத்தாய் வெச்ச குழம்பு என்று எடுத்து வைத்தான் ரியாஸ் .
மூடியை கழற்றி ஊத்தினான் வினோத் . டேய் ஏன்டா ரசத்த போய் குழம்புன்னு சொல்ற ..
டேய் அது குலம்புடா அட அழகா ரசம் இந்த பாட்டில்ல இருக்குடா என்று இன்னொரு பாட்டிலை எடுத்து வைத்தான் .
உங்க வீட்டுக்கு ஒரு அண்ணி வந்தாலாவது நாங்க உங்கம்மா சமையல்ல இருந்து தப்பிக்கலாம்னு பார்த்த உங்கண்ணன் அதுக்கும் வழி பண்ண மாடிங்கறார் .
நாளைக்கு கூட பொண்ணு பார்க்க போறதா அம்மா சொன்னாங்க என்று பேசிய படியே சாப்பிட்டு முடித்தனர் .
மாலை வீடு சென்றதும் தாயிடம் தன் முதல் நாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டாள் . உனக்கு புடிச்சிருக்காடா கண்ணு . உனக்கு சிரமமா தோனுச்சுன்னா போக வேண்டாமுடா என்றாள் தாய் .
இல்லம்மா எனக்கு பிடிச்சிருக்கும்மா . எல்லாரும் நல்லா பழகறாங்க . வேலையும் கஷ்டமா இல்லைமா .
உன்னோட சந்தோசந்தாண்டா எனக்கு முக்கியம் .
3 மாதம் போனதே தெரியவில்லை. பானுவும் பிரபுவும் வர்ஷிதாவின் நெருங்கிய நண்பர்களாயினர்.
ஞாயிற்று கிழமையில் பிரபு வீட்டுக்கு அழைத்திருந்தான். அம்மாவிடம் அனுமதி பெற்று பானுவும் வர்ஷிதாவும் பிரபு வீட்டுக்கு சென்றனர்.
பிரபுவின் அம்மா அன்பாய் பழகினார்கள். இருவருக்கும் பூ வாங்கி வைத்திருந்தார்கள். குடிப்பதற்கு
பழரசம் கொடுத்து உபசரித்தார்கள். மதிய உணவிற்கு அசைவ உணவு சமைத்து சாப்பிட வைத்து அசத்தினார்.
வார வாரம் நான் மட்டும் தான் மாட்டுவேன். இந்த வாரம் என்னட்டு சேர்த்து இன்னும் இரண்டு அடிமைகள் சிக்கியது என் பாக்கியம் என்று நகைத்தான் பிரபு.
போடா போக்கிரி என்று அவன் அம்மா முகத்தை திருப்பிக்கொள்ள,
இல்லம்மா உங்க சமையல் நிஜமாவே சூப்பர் என்று இருவரும் பாராட்ட உச்சி குளிர்ந்து போனார் பிரபுவின் தாய்.
அவனது தந்தையும் ப்ரெண்ட்லியாக பழக அன்றைய பொழுது நல்ல அரட்டையில் கழிந்தது.
இறைவன் படைத்த இந்த உலகத்தில் எவ்வளவு அற்புதமான மனிதர்களை படைத்துள்ளார். இவர்களுடன் வாழ்வதே எவ்வளவு சுகம் என்று மகிழ்ந்தாள்.
ஒரு வெள்ளியன்று , காலை வினோத் ஷோ ரூம் முன் இருக்கும் புல் வெளிக்கு தண்ணீர் விட்டுகொண்டிருந்தான். அன்று GM லீவ்.
ஏன்டா அழகா நாளைக்கு நான் தான் புல் இன்ஜார்ஜுனு சொன்னியே. அது இதுதானா என்றபடி வந்தான் ரியாஸ்.
சரி ஏண்டா நம்ம GM இன்னைக்கு லீவு.
அவர் நம்ம MD க்கு உடம்பு சரியில்லைன்னு அட்மிட் பண்ணிருக்கரதாள மீட்டிங் அட்டென்ட் பண்ண சென்னை போயிருக்காரு என்றான் வினோத்.
ஹார்ட் அட்டாக் வந்து அட்மிட் ஆகியிருப்பதால் இனி அவர் வரமாட்டார் என்றும் அவரது மகன் வருண் பொறுப்பேற்க போவதாக செய்தி பரவியது.
வருண் ஏற்கனவே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பனியை மும்பையில் நண்பனுடன் தொடங்கி வெற்றிகரமாக நடத்திகொண்டிருப்பதாக வினோத்தும் ரியாசும் கூறினார்கள்.