தாயின் முதல் முத்தம்

தாயின் முதல் முத்தம்..


பிறந்த கணம்

நான் பூமியின் குளிரிலிருந்து விடுபட

என்னை கையில் ஏந்தி

என் முகத்தில் சூடான முத்தத்தை பதிக்க

என் தாய் அருகில் இல்லை..



என் பிஞ்சு விரல்களை வருட

என் மென் பாதங்களை வருட

என்னை ஆசையாய்

நெஞ்சு கூட்டில் புதைத்து

பால் கொடுக்க என் தாய் இல்லை..



தத்தி தாவி விளையாடி வயதில்

கீழே விழுந்த போது அள்ளி எடுத்து

என் கண்ணீரை துடைத்து

என் முகத்தில் முத்தத்தை பதிக்க

என் தாய் அருகில் இல்லை..


வெற்றிகளிப்போடு

நான் வென்ற பரிசுகளை

ஆசையாக காண்பிக்கும் போது

என்னை தூக்கி சுற்றி

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள

என் தாய் என்னுடன் இல்லை...



என் தாய் என்னருகில்

இல்லையென்று மருகி

கவலை கடலில் தத்தளித்து கொண்டிருந்த நான்

இன்று மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கிறேன்..

ஏன்.. என்று கேட்கிறாயா..?


என் தாய்

எனக்கு முதல் முத்தத்தை

பதிக்காவிட்டால் என்ன..?

நான் என் தாய்க்கு

முதல் முத்தத்தை பதிக்க போகிறேன்..

உன் மழலை சத்தத்தை

உணர இரவென்றும் பகலென்றும் பாராமல்

உன்னை என் கையில் ஏந்தி

உன் முகத்தில் சூடான இதழ்களை பதிக்க

காத்திருக்கிறேன் நான் உன் தாயாக..

S.Nirosa
Department of B.TECH Information Technology,
Dr.NGP INSTITUTE OF TECHNOLOGY
COIMBATORE.

எழுதியவர் : S.Nirosa (13-Nov-14, 7:27 pm)
பார்வை : 184

மேலே