வணங்கிட இந்நாள்
பல நாள் தாங்கி
மண்ணில் எனை ஈன்றவளே(அன்னை)
பலமாய் தாங்கி
மண்மேல் எனை நடைபோட
வைத்தவரே(தந்தை)
இருகவிகள் சங்கமித்து
இக்கவியை ஈன்றெடுத்தீர்
நின் பாதம் வணங்கிட
எந்நாளும் எனக்குண்டு ஆனால்
இந்நாள் அதனினும் சிறப்புண்டு
ஜீவித்த கடவுளரே
மறுபிறப்பிலும் தங்கள் மகனாவேன்
தங்கள் ஆசிகளோடு நான்
உலகை கண்ட முதல் நாளை
வரவேற்க்கிறேன்