தாயின் அன்பு முத்தம்

சுமைகள் பல இருந்தும்
சுமை என்று நினைக்காமல்
என்னை சுமந்தவளே..!

எல்லோர் வாழ்விலும்
மரணமே எல்லையாக இருந்தும்
மரணத்தின் எல்லையை தாண்டி
என்னை பெற்றவளே...!

நீ அன்பாய் கொடுத்த
முதல் முத்தம்
இன்றும் என்றும் வேணுமடி..!

எனது பசி தீர்த்த பின்பே
நீ! பசி காண்பது அதிசயமடி ...!

நான் மீதம் வைத்த உணவை
எச்சில் பாராமல் உண்டாயடி ...!

நான் உறங்க தங்க தொட்டில் இருந்தாலும்
உன் புடவையில் கட்டிய
தூளி போலாகுமா ?

நீ பாடும்
தாலாட்டை கேட்டு
சந்திரனும் உறங்கி போனதாய் நினைத்தேன்
அமாவாசையில்...!

நான் செய்த தவறுக்கு அடித்தாய்
வலி கண்டது நான் ...!
அழுதது நீதானடி ...!

வானில் இருந்து விழுந்த மழைத்துளி
என்னை தழுவும்முன்
சற்றென்று என்னை மூடிய
உந்தன் முந்தானை
குடையானது வியகுதடி ...!

நான் பிறக்கும் வரை
என்னை உன் வயிற்றில் சுமந்தாய் ...!
நடக்கும் வரை
உன் இடுப்பில் சுமந்தாய்...!

இத்தனையும் என்ன செய்து
உன் கடன் தீர்பேனடி...!

கடவுளிடம் வரம் வாங்கி
உன்னை என் கருவில் வைத்து
பெற்று எடுப்பேன் என் மகளாக ...!
அம்மா...!

எழுதியவர் : கார்த்திகேயன் (13-Nov-14, 11:55 pm)
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 476

மேலே