இதோ வருகிறாள் என் தாய் - கயல்விழி

இருகரம்கொண்டு
என்னை அணைக்க
உச்சி முகர்ந்து
முத்தமாரி பொழிய
இதோ வருகிறாள் என் அன்னை..!

என் ஏக்கங்கள் தீர்த்திட
இன்பங்கள் சேர்த்திட
தனிமையை விரட்டி
சேய்க்கு துணையாய்
இதோ என் தாயே வருகிறாள். .!!

மாற்றார் கண்பட்டால்
மதிமுகத்திற்கு ஆகாதாம்
திருஷ்டிபொட்டிட்டு
என்னைக்கொஞ்ச தேவதையாய்
இதோ வருகிறாள் என் அன்னை

வலியில் துடிக்கும் மகளுக்கு
நல்வழியினை காட்டி வாழவைக்க
வானகம் விட்டு என் அன்னை
இதோ வருகிறாள் .

பணம் தேடும் உலகினில்
மகளின் நலம்தேடும்
என் தாய் மரணத்தை வென்று
இதோ வருகிறாள் மறுபடியும்.!

மாண்டார் மீண்டு வருவதில்லை
மரணத்தை வென்றவர் எவரும் இல்லை
கற்பனையில் அன்றோ
கவிவடித்தேன்
கன்னி என் வரிகளில் உண்மை
இல்லை.......

எழுதியவர் : கயல்விழி (14-Nov-14, 8:02 am)
பார்வை : 171

மேலே