அப்பத்தா இல்லாத வீடு

வெறிச்சோடிக் கிடந்தது
அப்பத்தா இல்லாத வீடு...

வெறுமை சுமந்திருந்தது
நேற்று அவள்
கிடந்த திண்ணை...

எச்சில் பணிக்கனும்
வெற்றிலைப் பெட்டியும்
எடுப்பாரின்றி மூலையில்...

தெருவில் போவோரை
காது தண்டட்டி ஆட
பேரைச் சொல்லிக்
கூப்பிட்டு விசாரித்தபடி
அமர்ந்திருக்கும் நாற்காலி
சுமக்க ஆளின்றி
சும்மா கிடந்தது...

தொடர்ந்து படிக்க மனசு வலைப்பூவுக்கு வாருங்கள்...

எழுதியவர் : பரிவை சே.குமார் (14-Nov-14, 1:10 am)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 69

மேலே