நினைக்காமல் இருப்பாயோ
நினைக்காமல் இருப்பாயோ ..?
வரும் தும்மலை ...
தும்ம முயற்சிக்கும் போது ...
வராமல் விடும் தும்மல் போல ...
தும்மல் இல்லை என்ற ..
அர்த்தம் இல்லையே....!!!
என்னவனே ....
நீ அருகில் இல்லை ...
அதற்காக நீ என்னை ...
நினைக்கவில்லை என்று ...
நான் கருதமாட்டேன் ....!!!
என் நினைவில் துடிப்பானே ..
நினைக்காமல் இருப்பாயோ ..?
திருக்குறள் : 1123
+
நினைந்தவர்புலம்பல்.
+
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 123