தொடரட்டும் - தமிழன் பரிதி வருங்கால உழவன்
![](https://eluthu.com/images/loading.gif)
சாத்திரம் பற்றி எறியட்டும் - சடங்கு
சாக் குழிக்குள்ளே போகட்டும்!
சிந்தையில் புரட்சி தொடங்கட்டும் - அது செயலாய் வெடித்துச் சிறக்கட்டும்!
தமிழர் மெய்யியல் தேடட்டும் - இங்கு
மடமை முற்றும் ஒழியட்டும்
மனிதம் தன்தலை தூக்கட்டும் - உலகம்
தமிழே ஆள்வதைப் பார்க்கட்டும்!