கல்வி முறையில் மாற்றம்- கவிதைப் போட்டி

கல்வி முறையில் மாற்றம்.
கல்வி – அது ஒரு
காலத்தின் கண்ணாடி.
நிலைக் கண்ணாடி – என்றுமே
நிலைத்தக் கண்ணாடி.
கைப் புண்ணுக்குக் கண்ணாடியா?

காலத்தின் கண்ணாடியான
கல்வி முறையில் மாற்றமா? – இது
நடைமுறையில் சாத்தியாமா?
சாதிக்கத்தான் முடியுமா?

பாதை இல்லாமல்
பயணம் இல்லை - கல்வி
போதனை இல்லாமல்
சாதனை இல்லை.

சாதிக்கத்தானே கல்வி முறை – இதனையே
சோதிக்கவா நடைமுறை.
போகும் பாதையில் பள்ளம் இருந்தால்
பாதிப்பு இல்லாமல் இருக்குமா?
கற்கும் கல்வியில் மாறுதல் இருந்தால்
கற்பவர் மனதில் நிலைக்குமா?

மனிதனிடம் தான் மாற்றம் தேவை. – கல்வி
முறையில் மாற்றம் தேவையா?
கண்ணை மூடிக்கொண்டு
விண்ணைக் காண முடியுமா? – அறிவை
மண்ணைக் கொண்டு மூட முடியுமா?

மொட்டு விரிந்தால்தானே பூ
மலரும். – மழலை மொட்டுக்கள்
மகிழ்ந்தால்தானே கல்விப் பூ
நெகிழ்ந்து பூக்கும்.

தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,
அறிவியல்,சரித்திரம்.பூகோளம் – இவை
ஆறும் தானே கல்விக்குள் அடக்கம்.
அதனால்தானே மனிதனுக்கு
ஆறறிவு படைத்தது. – இதில்
ஏழாவது அறிவு எது வரும்.?

கண்ணாடி உடைந்தால்
காலுக்குத் தானே
காயம் ஏற்படும். – கல்வியில்
மாற்றம் இருந்தால் என்ன நேரும்?


ஆறறிவுக்கு மேல்
ஏழாவது அறிவா இந்த மாற்றம்.
எட்டிப் பார்த்தால் வரும் தடுமாற்றம்.

எழுதியவர் : ச. சந்திர மௌலி (15-Nov-14, 5:57 am)
பார்வை : 512

மேலே