தேவதையின் காதல்
இதயங்கள் மயங்கும்
இதமான ஓர் இரவில்
இவள் மட்டும்
ஏன் விம்முகின்றாள்
விண்ணகத்து தேவதைக்கு
கண்ணீரா .?
வேதனை பகிர்ந்திடு
வேண்டிக்கொண்டேன்
விடிவெள்ளி நெருங்கிடும்
வேளைதனில்
விடியலை தொலைத்த
கன்னி இவள்
காதலின் பிடியில்
மாட்டிக்கொண்டாள்
தப்பிட எண்ணியும்
தோற்றுவிட்டாள்
காதலன் காரிருள்
விலகி விட
கன்னியின்
விழிகளில் கண்ணீர் மழை.