என்னமோ போடா -சந்தோஷ்
கற்பனையான என்
”ஓர் இரவு” நிகழ்வு
தோசை சுட்டுக்கொண்டிருந்த
என்னவளிடம் நான்
சொன்னேன்.
“ தோசையென்றால் ரொம்ப ஆசை”
” சரி! ஊற்றித்தருகிறேன்
எத்தனை தோசை வேண்டும்?”
என்றாள் என்னவள்.
“ நீ ஊற்றிக்கொடுத்தால்
எதுவாக இருந்தாலும்
மதுவாக தானே
போதையேறும்..செல்லமே ?
என் தேவையறிந்து
நீ ஊற்றிக்கொடு
நான் ஏற்றிக்கொள்கிறேன்
போதையை “
இரட்டை அர்த்தத்தில்
நையாண்டியிட்ட எனக்கு
அடுத்த சிலநொடிகளில்
சுளீரென ஏறியது
நெருப்பில் வாட்டிய
தோசை கரண்டியால்
என் உதட்டில்
ஒரு சூடு..!
சூடு பட்ட இடத்தில்
உன் உதடு கொடுத்து
ஒத்தடம் பதிப்பாயா?
அன்பே....!
மீண்டும் கவிதை
நையாண்டியிட்டேன்....!
பொய்யாக முறைத்து
மெய்யாகவே சொன்னாள்
என்னவள்
” இன்றிரவு
பட்டினியாக தூங்கணுமா
கவிஞரே ..? “
பட்டினியா...................??
அன்பே....................
ஆருயிரே..........................!
----------------------------------------------
பசிக்கும் நேரத்தில்
இந்த கவித்துவ நக்கல்
உனக்கு தேவையாடா
சந்தோசு....?
என்னமோ போடா..!
----------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்