இராணுவ வீரன்

அணிவகுப்பு மரியாதை அவனுடன்
மதிப்பு மிகு மாண்பு மிகு வரவேற்பில்
அவனின்றி அணிவகுப்பு என்றும் இல்லை
இராணுவம் எனும் பெயரில் படைவீரன்
தன் நலம் பேணாது நாட்டின் நலம் காத்து
தன் குடும்பம் தன் உறவு எல்லாமும் இருந்தும்
கடமையே பெரிது என்றும் இரவு பகல் பாராது
இயந்திர மனிதனாய் இலட்சியமே
தன் மனம் முழுதும் கொண்டவனாய்
உழைக்கும் அவன் உயிருள்ள இயந்திரமே ,
பெற்றவர்கள் மனைவியர்கள் பிள்ளைகளும்ஏக்கத்துடன்
எண்ணம் எல்லாம் அவனாகக் காத்திருப்பர்
புரிந்தும் அவன் புரியாமலும் மனம் எல்லாம் கல்லாக்கி
கனமான இதயத்துடன் கடமையிலேகண்ணாகி
நாட்டின் அரண் காத்திடுவான்
நாட்டிற்கு தன் சேவை ஆற்றிடவே துணிந்திடுவான்
உண்மையுள்ள வீரன் கொண்ட குறி தப்பாது
வீழ்ந்தாலும் மடிந்தாலும் வீணாகா அவன் சேவை
வீரம் மிகு வீரத் தாய் பெற்றெடுத்த வீரமகன் அவனே
வீரன் அவன் சேவையிலே வீராப்பு கொண்டிடுமே நம் நாடு