என் அன்னையிடும் கோலம்

வைகறையில் சேவலைக் கூவச் சொல்லி
துயில் உரிப்பாள்

உருக்கிய ஆலங்கட்டி நீருடன்
பசுஞ்சானத்தைக் கலக்கி மழைப்போல்
தூவுவாள் சமமாகப் படர...

தன் கூந்தல் இறங்கிய
மயிர்க்கொண்டு வாசல் துடைத்து
இரவில் தூண்டிலிட்டுப் பிடித்த
விண்மீன்களைப் புள்ளியென இட்டு
மழைக் காலத்தில் உருவிய
மின்னலைக் கொண்டு
கோலம் வரைவாள்....

இவ்வழகைக் காண
இரவுமட்டும் பகல்மட்டும் என விழித்து
வாழும் உயிர்களும் துயிலாமல்
என் வீட்டு வாசலை
வட்டமாக அமரும் அன்நேரம்.....

எழுதியவர் : நவீன் குமார் .ந (15-Nov-14, 3:48 pm)
பார்வை : 163

மேலே