சோலை சூழ் சாலை

என்னதிது ??
தரையினில் பதிக்கப்பட்டிருக்கும்
காரைகள் அதுங்கூட
பறிக்கப்பட்டு நெருக்க
பொறிக்கப்பட்ட
மென்பூக்களாய்
காணப்படுகின்றதே ?
ஒ ஹோ ..
நீ அனுதினமும்
காலை மாலையென
கூடிட்டதாய் கருதிடும்
இடையதன் எடைக்குறைந்திட
நடையோ நடையென
நடைபயின்றிடும்
சா (சோ )லை இது தானோ ??