வைரம்

என் வெளிர் நாக்கின்
நுனியதனைக்கொண்டு
நின் குளிர் மூக்கின்
நுனியதனை தீண்டி
ஈரமாக்கி,என் மனதின்
பாரம் குறைத்திட
ஆசைதான் ...
அதற்குமுன் ,
ஐயோ பாவம் !!
ஒரே ஓர்நாளேனும்
நின் மூக்கினில் மிளிர்ந்து
பின் மடிந்திட வேண்டுமென
தன் நெடுங்கால ஆசையென
உன்னிடம் முன்மொழிந்திட
என்னிடம சிபாரிசு கேட்கிறது
நிறைவேற்றி விடேன் !!
யாரோ
கிம்பெர்லியின் வைரமாம் .. ...