கோலங்கள்

தினமும் ..
அதிகாலையில்
கோலமிடும் நீ..
என்னை பார்க்கும் வரையில்
நன்றாகப் போடுகிறாய்..
அப்புறம்..
கோலமாவை..
வீணடிக்கிறாய்..
கலைத்து
கலைத்து
கலைத்து..
...
கை போடுகிறது சிக்கு கோலம்..
உன் கால் விரல் போடுகிறது ..
என்னை ...
சிக்க வைக்கும் கோலம்.!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
எப்போது போடப்போகிறாய்?
என் வீட்டில்..
உன் கோலம்!
.

எழுதியவர் : கருணா (15-Nov-14, 5:12 pm)
Tanglish : kolangal
பார்வை : 633

மேலே