புல்லாங்குழல் உருவானகதை பொய் இல்லை

புல்லாங்குழல்
பூமியில் பிறந்த கதையை
புத்தகத்தில் படித்தேன் -
காட்டில்
வளர்ந்திருந்த மூங்கிலை
வண்டொன்று துளைத்ததாம்...
அதில் -
காற்று புகுந்ததால்
இசை வெளிப்பட்டதாம்.
அதுகண்ட
நம் முன்னோர்கள்
புல்லாங்குழலை உருவக்கினார்களாம்...
இக்கதை ...
முழக்க முழக்கப் பொய்யென்று
முடிவு செய்தேன் .
அப்போதுதான் ....
.
எங்கோ இருந்த - நீ
என்னைப்பார்த்தாய்!
- உன்
விழிகள் இரண்டும்
வண்டாக மாறவில்லை ...
என்மீது வந்து
அமரவில்லை -
ஆனால்...
அவ்விழிகள்
என் -
இதயத்தைத் துளைத்துவிட்டது
அதனால் ...
புல்லாங்க்குழல் உருவானகதை
பொய் இல்லை - என்பதைப்
புரிந்து கொண்டேன்.