பேருந்து காதல்
ஒரு பெண்ணும் இரு கண்ணும்
ஊர்கோலமாய் போகுதே
அவன் நெஞ்சம் மறு நெஞ்சிடம்
தஞ்சம் அடைய கெஞ்சுதே
சில நேரம் பேருந்து வரும்நேரம்
அதிக கால அவகாசம் ஆகுதே
அந்த நேரம் இவன் விழிகள்தான்
கரகாட்டம் தொடர்ந்து ஆடுதே
நடை பாதை தேநீர் கடை பலகை
இவன் பரீட்சை கூடம் ஆனதே
அந்த பெண்ணின் கடைக்கண் மேலே
இவன் உருவம் விழ ஏங்குதே
காலபோக்கில் நான்கு கண்கள்
சந்தித்து காதல்பூக்கள் மலருதே
பேச்சுவார்த்தை பரிவர்த்தனைகள்
மெருகில் காதல் நன்கு வளருதே
ராசிகட்டம் நல்ல மாதிரி அமைந்து
ஊர்கூடி மணமேடையில் ஏற்றுதே
கணவன் மனைவியாய் கோயில்குளம்
அதே பேருந்தில் பயணம் போகுதே
அடுத்த ஜன்னல் கவனமாய் பாருங்கள்
அதே தேநீர் கடை பலகை தாண்டுதே
வேறு பெண்ணும் வேறிரு கண்ணும்
பூமியின் அடுத்த சுழற்சி தொடங்குதே